ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக 3 படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் அவருக்கு தோல்விபடமாக அமைந்தது. இதனை தொடர்ந்து வைராஜா வை படமும் தோல்வியில் தான் முடிந்தது.

இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் வாழ்க்கையை வரலாற்று கதையாக எடுப்பதாக கூறினார் அதற்கான ஃபஸ்ட்லுக் போஸ்டரும் வெளியானது.

ஆனால் தற்போது மாரியப்பன் கதையை கிடப்பில் போட்டுவிட்டு திகிலான ஒரு பேய் படத்தை எடுக்கவுள்ளார். இதனை தனுஷ் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். இந்நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நடிகர் நடிகைகளின் தேர்வுக்கு பின் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here