அஜித் தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாளுக்காக காத்திருக்கிறார். ஸ்ட்ரைக் முடியாமல் நடந்து கொண்டிருப்பதால் படப்பிடிப்பு தள்ளி போய் கொண்டிருக்கிறது.

விஸ்வாசம் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று காத்திருந்த ரசிகர்கள் தற்போது சோர்வாகியே போய்விட்டனர். தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தல பிறந்த நாள் தான்.

இந்த பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் இப்போதே களத்தில் இறங்கிவிட்டனர். தற்போது கேரளா ரசிகர்கள் 29 நாள் மட்டுமே இருக்கும் தல பிறந்தநாளை புதிய ஹேஸ்டாக் #തലജന്മദിനോത്സവംIn29Days செய்து ஆரம்பிக்க அது இந்தியளவில் மூன்றாம் இடத்தை பிடித்தது. தற்போது முதலிடத்தையும் பிடித்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here