தமிழ் சினிமாவில் வரலாற்றில்  ஈடில்லா இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா  1000 படங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். 75 வயதாகும் இவர் 7500 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சியும் நடத்தில் வருகிறார். சமீபத்தில் அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர் தற்போது இசை நிகழ்ச்சியை அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் நடத்தியுள்ளார்.இங்கு அவர் இசை நிகழ்ச்சியை நடத்துவது இதுவே முதல் முறை. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here