தமிழில் தனுஷிடம் தொடங்கி விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு இந்த சிறிய வயது மற்றும் குறுகிய காலத்திலே இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தவர் அனிருத்.

தற்போது தமிழை தாண்டி தெலுங்கிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாணின் 25வது படத்திற்காக இசையமைத்த Baitikochi Chuste என்ற சிங்கில் பாடல் வெளியானது.

இந்த பாடல் வெளியான 8 மணி நேரத்தில் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது வரை 15 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் டோலிவுட்டில் எனக்கு பெரிய வரவேறப்பு கொடுத்ததற்கு ட்விட்டரில் நன்றியை தெரிவித்துள்ளார் அனிருத்.

Facebook Comments

Please rate this

Leave a Reply