அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக முதன் முறையாக டி.இம்மான் இணைந்துள்ளார்.

இதற்கு முன் விவேகம் வேதாளம் போன்ற படங்களில் அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் அனிருத் தற்போது அளித்த பேட்டியில் எனக்கு வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடல் பிடிக்கவில்லை.

இதை நான் இப்படத்தின் இயக்குனர் சிவாவிடம் கூறிவிட்டேன். பாட்டை மாற்றிவிடலாம் என்றும் கூறினேன் ஆனால் அவரோ இந்த பாடலுக்கு படபிடிப்பை முடித்துவிட்டேன் என்று கூறினார். மேலும் இப்பாடலில் அஜித்தின் புத்துணரச்சியும் டான்சர்களின் குத்தாட்டமும் நன்றாக இருந்ததாக கூறினார்.

எனக்கு இந்த பாடல் பிடிக்கவில்லை ஆனால் ரசிகர்களிடம் இந்த பாடல் வரவேற்பு கிடைத்தது மகிழச்சியாக உள்ளது என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here