பாலிவுட்டில் இம்மாதம் 8ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் கலவையான வரவேற்பை பெற்ற படம் Hate Story 4. முதல் 3 பாகங்களின் வெற்றியை தொடர்ந்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ஊர்வசி, கரண், விவான் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

தற்போது இப்படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ஆதார் அட்டையால் பிரச்சனை வந்துள்ளது. அதாவது இவரின் ஆதார் அட்டையை போல போலி ஆதார் அட்டையில் யாரோ மர்ம நபர் ஒருவர் ஹோட்டல் புக் செய்துள்ளார். இதுகுறித்து நடிகைக்கு தெரியவர தன் உதவியாளர் எதாவது புக் செய்தாரா என்று விசாரித்துள்ளார்.

பின் தன் பக்கத்தில் இருந்து எந்த ஒரு புக்கிங்கும் நடக்கவில்லை என்று தெரிந்து கொண்ட நாயகி பாந்த்ரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதோடு போலீஸார் தற்போது IP தகவல்களை எல்லாம் எடுத்து மர்ம நபரை தேடிவருவதாக பேட்டி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here