உலகம் முழுவதும் தொலைகாட்சியில்  சினிமா படங்களை தாண்டி இப்போது மக்கள் அதிகம் பார்ப்பது சீரியல்களை தான். அதுவும் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களை எடுத்துக் கொண்டால் இளம் நடிகைகள் நிறைய பேர் நடிக்கிறார்கள்.

அவர்களுக்காகவே இன்றைய கால இளைஞர்கள் கூட சீரியல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றே கூறலாம். அப்படி ஆல்யா மானசா, சரண்யா, வாணி போஜன், ரச்சிதா என பலரை உதாரணமாக கூறலாம். இவர்களது வரிசையில் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருபவர் பகல்நிலவு சீரியல் புகழ் சினேகா என்கிற ஷிவாணி.

இவரது கண்கள் அழகை வைத்து நிறைய மீம்ஸ்கள் கூட வந்தன. இவர் முதன்முதலாக பகல்நிலவு சீரியல் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவர் தான் 12வது வகுப்பு இப்போது தான் முடித்துள்ளேன் என்று ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

ஏனெனில் அவர் கல்லூரி படிப்பை எல்லாம் முடித்திருப்பார் என்பது இளைஞர்களின் ஒரு கணிப்பாக இருந்தது. அண்மையில் பள்ளி படிப்பை முடித்துள்ளதாகவும் விரைவில் இந்த சீரியலை அடுத்து நிறைய கமிட் செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here