நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் வெளிவரவுள்ளது. அதில் வடச்சென்னை மற்றும் மாரி 2 ரசிகர்களால் எதிர் பார்க்கபடுகிறது.

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் மூன்று வருடங்களுக்கு முன் வெளியான படம் மாரி. இந்த படத்தில் தனுஷின் கெட்டப் மற்றும் டீசர் பெருமளவில் வரவேற்பு பெற்ற அளவில் படம் வெற்றி பெறவில்லை.

காரணம் அந்த படத்தில் கதையின் வேகம் மற்றும் வில்லன் கதாபாத்திரம் தான். இதனால் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் வில்லன் கதாபாத்திரத்தை வலுபடுத்தியுள்ளாராம்.

மாரி 2 வில் நடிக்கும் கேரளத்தை சேர்ந்த வில்லன் நடிகர் டொவினோ தாமஸ் இந்த படத்தில் இரண்டு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here