தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பரத். இவர் தொடர்ந்து காதல், பட்டியல், எம் மகன் என வெற்றி படங்களாக கொடுத்தவர்.

இவர் எந்த படத்திலும் சமீப காலமாக பெரிதும் கமிட் ஆகவில்லை, ஸ்பைடர் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

தற்போது சிம்பா, காளிதாஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் நொந்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

இதில் குறிப்பாக ’நான் டபுள் ஹீரோ படங்கள் செய்தால், அதில் என் கதாபாத்திரமும் பேசப்படும், சின்ன கேரக்டர் ரோல் மட்டும் செய்ய, நான் இன்னும் அந்த அளவிற்கு கீழே போகவில்லை’ என வருத்தமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here