தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே நம்பர் 1 நடிகர் என்றால் ரஜினிகாந்த் தான். இவருடைய படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை தற்போதுள்ள நடிகர்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது.

அதே நேரத்தில் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் யார் என்பது நீண்ட நாள் கேள்விக்குறியாக உள்ளது, அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்கள் நாயகர்களை அடுத்த ரஜினி என முன் வைப்பார்கள்.

ஆனால், முன்னணி பத்திரிகையாளர்கள் இதுக்குறித்து தெரிவிக்கையில், ரஜினிக்கு பிறகு வசூல் மன்னன் என்றால் அது விஜய் தான்.

ஏனெனில் விஜய் படங்களுக்கு எப்போதும் பேமிலி ஆடியன்ஸ் இருக்கும், அஜித் படங்களுக்கு முதல் மூன்று நாள் இளைஞர்கள் கூட்டம் படையெடுக்கும்.

படம் சரியில்லை என்றால் அப்படியே கூட்டம் நின்றுவிடும், அதே நேரத்தில் விஜய் படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் கூட்டம் வருவதால் இன்னும் சில நாட்கள் அதிகம் ஓடும் என்று தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here