கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடித்த காலா படம் வெளிவரவுள்ளது. ஆனால் தற்போது ஸ்ட்ரைக் மிகவும் வலிமையாக நடந்து வருவதால் அடுத்த மாதம் படம் ரிலிஸ் என்பது சந்தேகம் தான்.
இந்நிலையில் இப்படம் சென்சார் செல்வதற்கு காத்திருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து NOC கொடுந்தால் மட்டுமே செல்ல முடியும்.
ஆனால் இதுவரை தயாரிப்பாளர் சங்கத்திடமிருந்து NOC வரவில்லையாம். ஆனால் நேற்று காலா படம் சென்சார் சென்றுவிட்டதாக தகவல் வந்துள்ளது. சென்சாரில் படத்திலிருந்து சுமார் 14 காட்சிகளை கட் செய்துவிட்டார்களாம்.