தினத்தந்தியின் பவள விழாவில் இன்று தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் ஏராளமான திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

2017ம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசை வெ. இறையன்பு-க்கும் மற்றும் ஈரோடு தமிழன்பனுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். மேலும் இந்த விழாவில் மோடி பேசியதாவது..

தமிழில் வணக்கம் தெரிவித்த பிரதமர் மோடி, பவள விழாவில் உங்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி. 24 மணி நேரமும் உடனுக்குடன் செய்தி தொலைக்காட்சிகளில் மக்களுக்கு கிடைத்து வருகிறது, ஆனாலும், காலையில் கையில் தேநீருடன் பத்திரிகை படிப்பதை மக்கள் நிறுத்தவில்லை.

தமிழகம், பிறமாநிலங்கள், வெளிநாடு என 17 பதிப்புகளில் தினத்தந்தி வெளிவருவது மாபெரும் சாதனை. மக்களின் உணர்வுகளை சமூகத்தின் கடைகோடி வரை கொண்டு செல்கிறது “தினத்தந்தி”. மேலும் எளிய முறையில் செய்திகளை புரியும் வண்ணம் கொடுப்பது தினத்தந்தியின் தனித்துவம் என்றும் தெரிவித்தார்.

வெள்ள நிவாரணம் தொடர்பாக தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசு செய்து தரப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply