தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என கூறும் அளவுக்கு தனியாக படங்கள் நடித்து கலக்கி வருகிறார் நடிகை நயன்தாரா. அதுமட்டுமின்றி முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதையும் அவர் கைவிடவில்லை. அடுத்து அவர் அஜித்திற்கு ஜோடியாக விசுவாசம் படத்தில் நடிக்கவுள்ளார்.

அவர் மலையாளத்தில் நடித்த புதிய நியமம் படத்தின் தமிழ் டப்பிங் பதிப்பு ‘வாசுகி’ என்ற பெயரில் நாளை வெளிவரும் என அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் நயன்தாரா புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்துள்ள இந்த நேரத்தில் இப்படி படம் ரிலீஸ் செய்யலாமா என நயன்தாராவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சில தயாரிப்பாளர்கள் அவரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தியதாக சொல்லப்படுகிறது.

“நான் எப்படி இதற்கு பொறுப்பாக முடியும்? அந்த படத்தின் தயாரிப்பாளர், டப்பிங் செய்து வெளியிடுபவர் மற்றும் விநியோகஸ்தரை தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்” என அவர்களுக்கு நயன்தாரா பதிலளித்துள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here