ரஜினிக்கு பிறகு விஜய் தான் தமிழில் மாஸ் காட்டும் நடிகர் என்பது எல்லாரும் அறிந்ததே. அதற்கு இவர் நடித்த மெர்சல் படம் தான் சான்று. ரஜினியின் சாதனைகளை முறியடித்த மெர்சல்.

இனி அடுத்து வரும் ரஜினி படங்களே விஜய்யின் சாதனையை தான் முறியடிக்கும் நிலையில் உள்ளது. ஆனால் சில வருடங்களுகு முன் தொடர் தோல்வியை கொடுத்தார் விஜய்.

அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, சுறா போன்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் அதற்கு பிறகு சுதாரித்த விஜய் காவலன், வேலாயுதம், நண்பன்போன்ற ஹிட் படங்களை கொடுத்தார்.

மீண்டும் ஒரு புதிய மார்கெட்டை விஜய்க்கு ஏற்படுத்திய படம் துப்பாக்கி. முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி விஜய்யை கிளாஸ்ஸாக காமித்தது மட்டுமில்லாமல் ஒரு பிரம்மாண்ட வசூலை வாரி கொடுத்த படமாகும். இதை தொடர்ந்து தளபதியின் திரைபயணம் உச்சத்தில் தான் உள்ளது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply