சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முழு காமெடி படமாக நடிக்க இயக்குனர் ராஜேஷுடன் சிவகார்த்திகேயன் இணைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் சந்தானத்துடன் ராஜேஷ் முன்னரே பணியாற்ற அதற்கு தயாரிப்பாளராக அதற்கு தேனாண்டாள் பிலிம்ஸும் இணைந்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் சந்தானம் படத்திலிருந்து விலக பிரபுதேவா இணைய இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ராஜேஷ் சிவகார்த்திகேயன் படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுத ஆரம்பித்துவிட்டாராம்.

இதனால் சிவகார்த்திகேயன் படத்தை முடித்த பிறகு சந்தானம் படத்தை ராஜேஷ் இயக்கவுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here