தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக  தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இன்று முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் இவரது படங்களில் குடித்து விட்டு பெண்களை கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

இது போன்ற காட்சிகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் குடும்பத்துடன் படம் பார்க்க வருபவர்களுக்கு முகம் சுளிக்க வைத்தது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்திற்கு பிறகு எனக்கு சமூக பொறுப்பு கூடியுள்ளது. இனி குடிக்கும் காட்சிகளோ பெண்களை கிண்டலடிக்கும் காட்சிகளோ இருக்காது.

என்னை இயக்கும் இயக்குனர்களும் இதனை புரிந்து கொண்டு காட்சிகளை அமைப்பார்கள் என நம்புவதாக கூறியுள்ளார், இவரது முடிவு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here