தமிழ் சினிமாவில் சிம்பு  நிறைய திறமைகளை தன்னுள் கொண்டவர். அதை நீங்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறீர்கள். சில காலமாகவே அவர் தன் பிரச்சனைகளை பொறுமையாக சமாளித்து வருகிறார்.

தற்போது டிவி ஷோவான சூப்பர் சிங்கரில் சிறப்பு நடுவராக அவர் கலந்து கொண்டு வருகிறார். முன்பு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் சிம்பு நடுவராக கலந்துகொண்டார்.

இந்த காமெடி நிகழ்ச்சியில் இன்னொரு நடுவராக நடிகர் தாடி பாலாஜி  இருக்கிறார். இவரின் குடும்ப பிரச்சனை அண்மையில் அடுத்தடுத்து செய்திகளாக வெளியானது.

அவரும் அவரின் மனைவி நித்யாவும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் சிம்பு அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதற்காக நித்யாவுக்கு போன் கால் செய்து பேசியிருக்கிறார். .

ஆரம்பத்தில் நித்யா இதை நம்பவில்லையாம். பின் வீடியோ அழைப்பில் வந்த சிம்பு, குடும்ப பிரச்சனை பற்றி 1 மணி நேரத்திற்கும் மேலாக நித்யாவிடம் பேசியிருக்கிறார்.

ஜோடி நிகழ்ச்சியின் போது சிம்புவின் அப்பா டி.ஆரும் பாலாஜியிடம் பிரச்சனைகள் குறித்து 2 மணி நேரம் தனியே பேசினாராம். விரைவில் நித்யாவும், பாலாஜியும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கலாம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here