சினிமாவில் திறமை மற்றும் கடின உழைப்பால் ஜெயித்து விடலாம் என்பதற்கு நிறைய நடிகர்கள் உதாரணம். மக்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் நடிகர் சிவகார்த்திகேயனை கூறலாம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலக்கி ஒவ்வொரு படியாக அந்த துறையில் முன்னேறி மக்களின் பார்வைக்கு வந்தவர். இப்போது சினிமாவிலும் ரசிகர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார். படங்களில் தண்ணி அடிப்பது, சிகரெட் பிடிப்பது, பெண்களை கிண்டல் செய்வது போன்ற விஷயங்களை தவிர்த்து வருகிறார்.

அண்மையில் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்தவரிடம் அரசியலில் ரஜினி, கமல்இதில் யாருக்கு ஆதரவு என கேட்டுள்ளனர். அதற்கு சிவகார்த்திகேயன், இருவரும் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் சொல்லவில்லை. நான் ஓட்டு போடுவதை என் வீட்டில் கூட சொல்ல மாட்டேன். ஓட்டு போடுவது என்பது மிகப்பெரிய பொறுப்பு. அது யாருக்கு என்பது எனக்கு மட்டுமே தெரிஞ்ச உண்மை, ரகசியம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here