இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அடுத்து வெளிவர தயாராக இருக்கும் படம் கலகலப்பு 2. இப்படத்தின் பாடல்கள் ட்ரெயிலர் டீசர் என அனைத்தும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்சி இயக்குவதாக இருந்த படம் சங்கமித்ரா. ஆனால் இந்த படத்திற்கான படபிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கவில்லை படம் எடுப்பாரா இல்லையா என்ற கேள்வி எழ அதற்கு சுந்தர் சி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

சங்கமித்ரா படம் வருகின்ற ஏப்ரல் அல்லது மே யில் படபிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயம்ரவி மற்றும் தோணி பட புகழ் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளனர்.

LEAVE A REPLY