July - 2018-08-12 09:15:33.125747

கார் விபத்தில் விக்ரம் மகன் படுகாயம்! அதிர்ச்சியில் விக்ரமின் குடும்பம்! வீடியோ உள்ளே!

vikram son accident

இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டு தன இருக்கிறது. இதற்கு வாகன ஓட்டிகள் தரப்பிலும், மத்திய, மாநில அரசு சார்பிலும் பல குற்றசாட்டுகள் வைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை, பராமரிப்பும் இல்லை இதனால் தான் விபத்துகள் நடப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு தரப்பில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து சட்டத்தை மீறுவதால் விபத்துகள் நிகழ்வதாக தெரிவிக்கின்றனர்.

நேற்று நள்ளிரவில் சென்னை டி.டி.கே சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று சாலை ஓரமாக நின்றுகொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். 

பின் அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று சென்னை தேனாம்பேட்டையில் நிலை தடுமாறி சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த உடன் போலீசார் காரில் இருந்தவரை பிடித்த போலீஸார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அந்த காரில் நடிகர் விக்ரம் மகன் துருவ் சென்றதும் விபத்து நடந்த பின் அவர் தப்பி சென்றதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் துருவ் எந்த காயமும் ஏற்பட்டதக்க தெரியவில்லை. இருப்பினும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.