July - 2018-08-13 05:39:27.981930

புயல் வெள்ளத்தில் நடந்த வித்தியாசமான திருமணம்! பின் நடந்தது என்ன தெரியுமா! வீடியோ!

weird wedding

கன மழையினால் மூழ்கிய ஆலயம் ஒன்றில் இளம் தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் யாகி புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் பெரும் மழையின் பிடியில் சிக்கித் தவித்தது.

இந்த நிலையில் புலாகான் பகுதியில் பெருவெள்ளத்தால் மூழ்கியுள்ள ஆலயம் ஒன்றில் இப்பகுதியில் குடியிருக்கும் 24 வயதான ஜோபல் டெலோஸ் தமது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான இளைஞரை அந்த பெருமழை சூழ்ந்த நாளில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மழையோ புயலோ வாழ்க்கையில் ஒருமுறைதான் திருமணம் செய்து கொள்வோம், அதை ஏன் நாம் தள்ளிப்போட வேண்டும் என ஜோபல் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். திருமணம் நடந்த ஆலயமானது தண்ணிரில் மூழ்கியிருந்தது. இதனால் தங்களின் திருமண உடைகள் நனைந்தது, ஆனால் அது பெரிதாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.