தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் பெரும் பக்க பலம் அவரின் ரசிகர்கள் தான். அவர் எப்போது தன் ரசிகர்களின் நலன் மீது அக்கறை காட்டுபவர். ரசிகர்களுக்கு அவரவர்களின் வாழ்க்கை தான் முக்கியம் என அறிவுறுத்துபவர்.

ஆனாலும் தியேட்டரின் படங்களை மட்டும் கொண்டாடாமல் பல இடங்களில் நடிகர் அஜீத் பெயரால் பல ரசிகர்கள் அமைப்பை நடத்தி சமூக நலம் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறார்கள்.

மலேசியாவில் அஜித் ரசிகர் மன்ற நல்லெண்ண புட்சால் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசாக 700 ரிங்கட்2 வது பரிசாக 500 நிங்கட்3 வது பரிசாக 250 ரிங்கட் பணத்தொகை வழங்கப்பட்டது.

இதில் ஆர்.கே.சுரேஷ் நடுவராக கலந்து கொண்டு பரிசை வழங்கினார். அப்போது பேசியவர் இந்த ரசிகர்கள் சமுதாயத்திற்கும் நல்லது செய்ய வேண்டும் என புரியவைத்திருக்கிறார்கள்.

இது போல ரசிகர்கள் செய்யும் நல்ல விஷயங்களை அஜித்திடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை என அவர் கூறினார். இந்த செய்தி இன்று மலேசிய தமிழ் செய்தி தாளில் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here