ஏப்ரல் வெளியீடு என்று சொன்ன ரஜனி நடிக்கும் 2.0 படத்தின் வெளியீட்டை ரசிகர்களின் விருப்பத்திற்காக ஜனவரிக்கு கொண்டு வர அந்த படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாகவுள்ளார் ஷங்கர்.

அதோடு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2 ஆம் பாகத்தை தயாரித்து வருகிறார். ஆனாலும் அந்த படத்தில் நடிக்கும் வடிவேலு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறார். படபிடிப்பு பாதி முடிந்த நிலையில் தற்போது அதிக சம்பளம் கேட்கிறாராம் மற்றும் என்னால் அதிக நடிகர்களுடன்லாம் நடிக்க முடியாது என்றும் மேலும் தன்னுடைய சொந்த காஸ்டியூம் டிசைனரை வைத்து தான் பண்ண வேண்டும் என்றும் பல பிரச்சனைகள் செய்து வருகிறாராம்.

இதனால் இப்படத்தை தயாரிக்கும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் நடிகர் சங்கத்திடம் வடிவேல் மீது புகார் அளித்துள்ளாராம்.

Facebook Comments

Please rate this

Leave a Reply