தளபதி விஜய் சினிமாவில் நடித்து பல வெற்றி படங்களை கொடுப்பதை போன்று மக்கள் நல பிரச்சனை பொது நல சமூக பிரச்சனைகளிலும் கலந்து கொள்வார்.

இவர் ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அந்த போரட்டத்தில் லட்சக்கணக்கானோர் மெரினாவில் கலந்து கொண்டனர். தற்போது அந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

விஜய், RJ பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதி என பலரும் இதில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply