விஜய் சீனியர் நடிகர் என்றாலும் அவர் அப்போ இருப்பது போன்று தான் இன்றும் இருந்து வருகிறார். என்னதான் சீனியர் நடிகராக இருந்தாலும் புதிய இயக்குனருக்கு வாய்ப்பு கொடுப்பதும் புதிய நடிகருடன் நடிப்பதுமாக தான் தற்போது விஜய் சஎய்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி மெகா ஹிட்டான படம் மெர்சல். இந்த படம் தமிழ்நாட்டில் மட்டுமே 125 வசூல் செய்த பிளாக்பஸ்டர் படம் இந்த படத்தில் காமெடியனாக வரும் யோகிப்பாபுவும் சமந்தாவும் விஜய்யே தேடி வருவார்கள்.

அப்போது 5ரூபா டாக்டர் பற்றி விசாரிக்க விஜய் பதில் பேசும் போது அப்போ அது நீ இல்ல என்று கலாய்க்கும் காட்சி வரும். அதை ஸ்பாட்டிலே யோகி பாபு சொல்வாராம். ஆனால் இது நல்லா இருக்கே விஜய் அண்ணாவிடம் எப்படி சொல்ல என்று அட்லி யோசித்தாராம்.

இதை கவனித்த விஜய் ‘அட நல்லா இருக்கே சும்மா கலாய்ங்கப்பா’ என்று கூற பெர்மிஷன் கிடைத்துவிட்டது என்று தான் அந்த காட்சி உருவானதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here